Friday, April 16, 2021

பகவான் ரமண மகரிஷி ஜீவ அருள் வாக்கு

ஓம் அகத்தீசாய நம: Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP., 4/19,VICKRAMASI VILLAGE, VADUGANTHANGAL POST, K V KUPPAM T.K., VELLORE - 632204. Cell : 8220627413.


பகவான் ரமண மகரிஷி ஜீவ அருள் வாக்கு



மகான் ரமண மகரிஷி ஜீவமொழி ஆசி நூல் உபதேசம்

 

நூல் பார்க்கப்பட்டது - அருள் மக்கள் சுருதி அம்மையார் அவர்களுக்கு

 

எடுத்து உரைத்தவர் - மகான் அகத்தீசரின் கொத்தடிமை அருள் அன்னை ஆதி சக்தியின் அருள் அடிமை டாக்டர் S .விஜயகுமார் , ஓங்கார குடில் , வேலூர்

 

நூல்

 

 குரு வணக்கம்

குருவின் அடி பணிந்து கூடுவோர்க்கு அல்லாது அரூபமாய் நிற்கும் சிவம்

 

அருணாசலம் சொரூபத்தை அறிந்து தெளிந்து

 

அருள் அடிமை வேங்கட ராமன் அருளும் உபதேசம்

 

நான் யார் எனும் நிலையை  நமசிவாயத்தால் உணர்ந்தேன். அறிவில் தெளிந்தேன்.

 

தெளிந்தேன் தெளிவித்தேன் மௌனமாய் பலருக்கும்

 

தெளிந்தனர் அறிந்தனர் அருளையும் என்னையும்

 

உலகிலே எளிதானதும் மிக கடினமானதும் ஆன்மிகம்

 

உணர்வால் உணர்ந்தவரே இறையின் அடிமை

 

அடிமை என்றால் இறைவனின் அகராதியில் அர்த்தம் வேறு

 

அடிமை என்றால் ஆள்பவனின் தன்னிலை விளக்கம்

 

தனித்து நின்ற பரத்திற்கு கூட்டம் எதற்கு

 

தவமான சொரூபத்திற்கு ஞான திருஷ்டி உண்டு

 

உண்டு தான் சும்மா இருப்பது அதனின் தன்மை

 

உரைப்பதல்ல முக்காலும் ஞான திருஷ்டி என்பேன்

 

என் மகளே சுருதி , ஒரு பொருளும் எண்ணாதிரு

 

என் தாயே அன்னியத்தை நாடி , தன்னை விடாது, இரு

 

இருக்கவே ,

 

விசாரணையை உன்னிடத்தில் வையாதே

 

இயல்பாக பரம் ப்ரம்மத்திடம் வைத்திடு போதும்

 

இறையும் குருவும் வழியையே காட்டுவர்

 

இறுக பற்ற வேண்டுமம்மா அது வழியை நீயும்

 

நீயுமே,

 

உன் ஞானத்தால் என்னையும் காணு

 

நீயுமே

 

உன் ஞானத்தால் இறையையும் காணு

 

செப்பிட ,

 

இறையும் குருவும் ஒன்றே

 

சீர் கொண்ட சிந்தையுடன் சிந்தித்துப்பாரு

 

பாரம்மா ஞானக்கண்ணால்

 

உன் கண்ணால் உலகை

 

பார்க்க வேண்டும் அவரவர் பார்வை கொண்டே

 

படிப்பில்லை பட்டமும் இல்லை பதவியும் இல்லை ஞானம்

 

பரந்தாமன் திருவடியை உணர்வதே ஞானம்

 

ஞானமென்னும் சிறு துளியை பருகி நிற்க

 

ஞானமயம் பெருவெள்ளம்  ஊற்றாய் இறங்கும்

 

பரசிவ வெள்ளமெனும் பிரபஞ்ச மெய் சிவமும்

 

பரமனின் படைப்பென்றே உணர்வதே ஞானம்

 

ஞானமெனும் தவசிந்தை அற்புதமல்ல

 

ஞானமெனும் அருள் சிந்தை அதிசயமும் அல்ல

 

இயல்பான இறையின் தன்னிலை அதுவும்

 

இயற்கையுடன் ஒன்றி வாழ்

 

அதுவே ஞானம்

 

ஞானமிது தெளிவு கொள் மகளே நீயும்

 

ஞானமதை உணர்ந்திடின் தாயாவாய் நீயும்

 

ஞானம் சக்தியற்றது என எண்ணுபவன் அறிவிலி

 

ஞானமே சர்வமும் என உணர்ந்தவன் தலைவன்

 

தலைவனை உணர்வதற்கு , நான் யார் என கேளு

 

தன்னை உணர்ந்தவனே தலைவனை உணர்வான்

 

தாயே உணர்ந்திடவும் அருளாசி தாரேன்

 

தயை கொண்டு உணர்த்திடு எனக்கு

 

- ஆசி நூல் நிறைவு

 

ஆசான் குறிப்பு  - கான்பவன்,  காணும் பொருள்,  இரண்டிற்கும் காரணமான காரிய பொருள் , அனைத்தையும் உணர்வதற்கு என்னை வந்து காண்



No comments:

Post a Comment

Liked - Yes or No பிடித்து இருந்ததா - ஆம் / இல்லை

Need More information - Yes / No மேலும் தகவல் வேண்டுமா - ஆம் / இல்லை